இந்தியாவில் பொதுமக்கள் கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. அதோடு கோவில் கருவறையையும் சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் ஆங்காங்கே செல்போன் பயன்பாடானது கோவில்களில் இருக்கத்தான் செய்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பிரபலமான பூரி ஜெகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. […]
