தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக கட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் மியாட் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் அறிகுறிகள் எதுவும் இல்லாமலே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]
