ஆழிப்பேரலையால் மூழ்கடிக்கப்பட்ட ஆதி தமிழர் நாகரிகதின் அடையாளச்சின்னம் பூம்புகார். சிலப்பதிகார காட்சிகளை கண் முன்னே விளக்கும் பூம்புகார் கலைக்கூடம் 1306 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாசிலா நாதர் ஆலயம் ஆகியவை புகழ்பெற்றவை ஆகும். இந்தியாவில் முதல் அச்சுக்கூடம், காகிதப்பட்டறை, பைபிளின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகியவை நிகழ்ந்த தரங்கம்பாடி, கம்பராமாயணம் எழுதிய கம்பர் பிறந்த தேரிழந்தூர் ஆகியவை பூம்புகார் தொகுதியில் தான் உள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் […]
