பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறி செல்வதற்கு பணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர் கோவை மாவட்டம், பேரூர் அருகே பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங் குத்தாக உள்ள 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கிறார். தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் […]
