மதுரையில் வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற வாலிபரை இல்லத்தின் உரிமையாளர் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். மதுரை மாவட்டம் பேரையூரில் சமையன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில சமையனும், அவரது மனைவியும் கதவைப் பூட்டிவிட்டு வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அன்னகாமு என்பவர் சமையனுடைய வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் புகுந்து திருட முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சமையன் திருட முயன்ற அன்னகாமுவை கஷ்டப்பட்டு மடக்கிப்பிடித்து பேரையூர் காவல் நிலையத்தில் […]
