இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இந்த தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் புத்தாடை அணிந்து இனிப்புகள் பரிமாறி பட்டாசுகள் வெடித்து மகிழ்வர். இந்நிலையில் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பூசி, சுடு தண்ணீரில் குளிப்பது காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கமாகும். இதனையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேரஸ் திருவிழாவானது கொண்டாடப்படும். இந்த திருநாளில் லட்சுமிதேவி கடலில் இருந்து வெளிவந்து காட்சி புரிந்ததாக ஒரு புராண வரலாறு இருக்கிறது. […]
