பூச்சி மருந்தை முகர்ந்து பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள நாகலகவுண்டன்பட்டியில் சந்தன குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், துர்கேஷ் என்ற மகனும் உள்ளனர். துர்கேஷ் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி மல்லிகா மற்றும் துர்கேஷ் அவர்களுடைய கொட்டைமுந்திரி தோட்டத்திற்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளனர். […]
