குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள வட்டானம் உப்பூரணி பகுதியில் வசித்து வரும் அங்குசாமி என்பவருக்கு கவின்(14) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கவின் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது, தாகம் எடுத்ததால் வீட்டில் குளிர்பான பாட்டில் இருந்ததை குடித்ததாக கூறினார். […]
