பூச்சி கொல்லி மருந்துகளில் கலப்படம் செய்தால் உரிமம் பறிக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலத்தில் பூச்சிகொல்லி மருந்துகள் உடன் போலியான உயிரி பூச்சி மருந்துகளை சேர்த்து கலப்படம் செய்து விற்பனை செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து பூச்சி மருந்து விற்பனை கடைகளை ஆய்வு செய்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வாளர்களை கொண்ட ஒரு குழுவனது அமைக்கப்பட்டுள்ளது. […]
