தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிப்போ மூலமாக கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு தொழில் பூங்காவை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என விவசாயிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 1,630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழில் பூங்கா அமைத்துக் கொள்ள கையகப்படுத்தும் முடிவை அரசு எடுத்துள்ளது. மேலும் எந்தவித கட்டாயமும் இல்லாமல் விவசாயிகள் […]
