நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை […]
