அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், விண்வெளிக்கு சென்று புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில் மிதக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஜெப் பெசோஸ் வரும் 20ஆம் தேதியன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இவர் தனக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி நிறுவனத்தின் மூலம், தன் சகோதரர் மார்க் பெசோஸ் மற்றும் அமெரிக்க நாட்டில் 82 வயதுடைய மூத்த பெண் விமானி (ஓய்வு பெற்றவர்) போன்றோருடன் பயணம் மேற்கொள்கிறார். […]
