சென்னையில் இன்று எதிர்பாராதவிதமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் ஒரு சில பகுதிகளில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதனால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செம்மபாரம்பக்கம் ஏரியில் நீர்வரத்து ஆயிரம் கனஅடியாக உள்ள ஏரியில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல புழல் […]
