புளியமரத்தின் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டு செல்லூர் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் இருந்துள்ளார். அவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவில் பழங்களை வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் பழங்களை கொள்முதல் செய்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சரக்கு ஆட்டோ நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய […]
