புளியங்குடி கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் மாடத்தி. இவரது மகள் பிரியா வயது (18). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் புளியங்குடியில் செயல்பட்டு வரும் மனோ கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களில் முன்பு கல்லூரிக்கு சென்ற இந்து பிரியா செல்போன் கொண்டு வந்ததாக கூறி அவரை மன்னிப்பு கடிதம் […]
