நிலத்தின் புல எண்ணை திருத்தம் செய்து தரக்கோரி விவசாயி குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கீழ மருதூர் கிராமத்தில் மாதவன் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் மேல பனையூர் கிராமத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு 49 சென்ட் விவசாய நிலப் பகுதியை வாங்கி தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட்டது. இந்த நிலத்தின் சான்றிதழ் மூலம் கூட்டுறவு வங்கி கடன் பெற்று மானிய விலையில் விவசாய உபகரணங்கள், […]
