ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நேற்றிரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புல்வாமாவின் கடூரா பகுதியில் வெளியூர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையடி குண்டுகளை வீசியுள்ளனர். இந்த பயங்கர சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு போலீஸ் கண்காணிப்பில் இருக்கிறது என காஷ்மீர் மண்டலம் காவல்துறை கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னர் மனோஜ் சின்ஹா கொடூர தாக்குதலுக்கு கண்டனம் […]
