புதுவையில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து 100 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு கூறியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஊழியர் பெட்ரோல் போட்டவுடன் பணம் கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர்கள் பணம் கொடுக்க முடியாது. ஓசியில் தான் போடவேண்டும். எங்களிடம் பணம் கேட்டால் பெட்ரோல் பங்கை கொளுத்திவிடுவோம் என்று மிரட்டி, அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இதுபற்றி பெட்ரோல் பங்க் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் […]
