சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் கோவை-பெங்களூர் சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கக்கோரி யானைகள் நல ஆர்வலர் எஸ்.பி சொக்கலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்திருந்தார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு இந்த போக்குவரத்து தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் […]
