மொராக்கோவிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் பலர் கடல் வழியாக நீந்தி ஸ்பெயின் நாட்டிற்குள் நுழையும் வீடியோ வெளியாகியுள்ளது. மொராக்கோ நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் பலர் தங்கள் உயிரை துட்சமாக கருதி மிகவும் போராடி கடல் வழியாக நீந்தியே ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைந்து வருகிறார்கள். ஸ்பெயினில் உள்ள Ceuta நகரில் அவர்கள் கரையேறுவதால், அங்கு எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சுமார் 1500 க்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் கடல் வழியாக நீந்தி வந்திருக்கின்றனர். […]
