கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகேயுள்ள வட்டகோட்டை அஞ்சுவரிக்கவிளையில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி ஜான்சன் (59. திருமணமாகாத இவர், கிள்ளியூர் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவர் பல வருடங்களாக பாலூர் குளத்தையொட்டியுள்ள கால்வாய் கரையில் சாலையோர புறம் போக்கு நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலையில் வருவாய்துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கருங்கல் காவல்துறையினருடன் ஜான்சனின் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து மாநில வணிகர் சங்க துணைத் தலைவர் ஜார்ஜ், […]
