சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து வகையான பயணிகளும் இன்று முதல் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம். அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் – சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் […]
