சென்னையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்து இருக்கிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீதம் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க நாளை(நவ..12) அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டி அதிமுக புறக்கணித்து இருக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வைத்து நாளை காலை […]
