உக்ரேனில் ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உக்ரேன் தலைநகரான கீவ்வில் புரோவரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கீவ் அருகே உள்ள ராணுவ தளத்தை தாக்கி அழித்ததாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை வெளியிட்ட அறிவிப்பில் “இரவு நேரத்தில் துல்லியமாக ஏவுகணைகள் மூலம் புரோவரி பகுதியில் இருந்த வெடிமருந்து தொழிற்சாலையை தாக்கி அழித்துள்ளோம்” என்று […]
