பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இமான் அண்ணாச்சி கடைசியாக எலிமினேஷன் ஆனார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், போட்டியாளர்களுக்கு நாமினேஷனில் இருந்து தப்பிக்க பிக்பாஸ் கடுமையான டாஸ்க் கொடுக்கிறார்.
