மாமல்லபுரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிந்தனர். தமிழகத்தில் முழுவதிலும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து மத்திய சுற்றுலா, புராதன சின்னங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல் போன்ற புராதன சின்னங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி முதல் 2 மாதங்களாக அடைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா தொற்று படிப்படியாக […]
