அதிமுக தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் என்ற பெயரில் மீண்டும் சசிகலா ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.. இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, நிறை அன்புடைய சகோதரர்களே! சகோதரிகளே! கழகத்தின் பேரன்பு தொண்டர்களே அனைவருக்கும் மகிழ் வணக்கம். இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கமாகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நற் பணிகளால் தமிழ் சமூகம் மீள் உயிர்பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கை நோக்கி நம் கழகத்தை இயக்குவோம். அண்ணா கண்ட வழியில்.. புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் கொண்ட […]
