நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சூப்பர் 12 சுற்றில் 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று சிறப்பாக விளையாடி வருகிறது. இறுதிப்போட்டியில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.. இந்த உலகக்கோப்பை தொடர முடிந்த பிறகு நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது […]
