ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் “எனது நண்பர் ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் […]
