புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உபகரணத்தின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என அந்த தனியார் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய கருவியின் விலை ரூ.80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா கண்டுப்பிடித்த இந்த புதிய கருவி இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
