கள்ளக்காதலனை பார்க்க சென்ற பெண்ணின் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியிலுள்ள ஆர்.எஸ். காலனியில் கணவன், மனைவி என தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 5 வயதான ஒரு மகளும் இருக்கின்றனர் . 30வயதான இந்த குழந்தைகளின் தாய்க்கு இன்ஸ்டாகிராம் மூலமாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஹபிபுல்லா என்பவருடன் பழக்கம் ஆகியுள்ளார். அதிக நேரம் செல்போனில் பேசிவந்த இவர்களின் நட்பு ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக மாறியுள்ளது . […]
