திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியில் வசித்து வருபவர் முத்தன் (65). இவர் சிறுமலை வனப் பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர் முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த வீட்டிற்குள் அந்த பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். […]
