ஹஜ் புனித யாத்திரைக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் நடைமுறையை தொடர வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் முக. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஹஜ் யாத்திரையை பற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4500 க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் சென்னையிலிருந்து சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் […]
