இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. […]
