குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல நாட்டின் பிரதமர் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் .மாநாட்டிற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். […]
