தமிழகத்தில் மாண்டஸ் புயல் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பாடநூல், சான்றிதழ்கள், நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் போன்றவை சேதமடைந்துள்ளதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரி பேசும் போது, புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் பாடநூல்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்படும். இதற்கான விவரங்களை அந்தந்த பள்ளி […]
