உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதங்களை கடந்த நிலையில் இந்தப் போரின் விளைவால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளனர். அந்த வகையில் உக்ரைனின் புச்சா நகரில் 280 பேரின் உடல்களை ஒரே இடத்தில் புதைத்து உள்ளதாக அந்த பகுதியின் மேயர் அனடோலி பெடோருக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “புச்சா நகரின் தெருக்களில் ஒரே இடத்தில் குவியலாக 20 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானவர்கள். […]
