பெரு நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 60 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெருவில் இருக்கும் பார்கோய் மாவட்டத்தின் மலைப்பகுதியில் திடீரென்று நிலச்சரிவு உண்டாகி 60 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனதாகவும், மேலும் 80 வீடுகள் கடும் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் வசித்து வருகிறார்கள். மலைப்பகுதிகளில் விதிமுறைகளை மீறி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அந்த வீடுகள் தான் நிலச்சரிவு ஏற்பட்டதில் புதைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
