திருமணம் நடந்த ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதோரசலூர் பி.கே.எஸ் நகர் பகுதியில் ஜான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நூர்ஜஹான் என்ற மனைவியும், ஜாகிர் உசேன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் தியாகதுருகம் அருகிலிருக்கும் பீளமேடு கிராமத்தில் வசிக்கும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் ஜாகிர் உசேனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து […]
