சேலம் மாவட்டத்தின் பிரதான நீர் ஆதாரங்களில் கன்னங்குறிச்சி புது ஏரி முக்கியமான ஒன்றாகும். சென்ற சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் நீரோடைகளில் தண்ணீர்வரத்து ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலையிலிருந்து அடிவாரம் வரை உள்ள இடங்களில் கட்டப்பட்டிருந்த அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் புது ஏரிக்கு அதிகளவில் வந்தது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டமானது கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு புதுஏரி நிரம்பியது. அதன்பின் உபரிநீர் மறுகால் […]
