புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பொறுப்பாக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டது தொடர்பாக கருத்து கூறிய புதுவை முன்னாள் ரங்கசாமி, மரியாதைக்குரிய தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு கொடுத்திருப்பது என்று மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல நிர்வாக திறன் மிக்கவர், நல்ல முடிவுகளை எடுக்க கூடியவர். இங்கு கூடுதலாக பொறுப்பேற்று வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி மாநில மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பார் […]
