மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் தர்மலிங்க நகரில் தச்சுத் தொழிலாளியான மோகன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகனுக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி மாடியிலிருந்து மோகன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகிலிருந்த குழாய் தண்ணீர் பள்ளத்தில் விழுந்து மோகன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மோகனை […]
