சென்னையில் திருமணமாகி ஒரே வருடத்தில் புதுமணப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிகணேஷ் (29), மற்றும் பிரியதர்ஷினி (29) ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சென்னை அம்பத்தூரில் இருக்கின்ற தனியார் வங்கியில் ஹரிகணேஷ் மேலாளராக பணியாற்றி கொண்டிருக்கிறார். நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பிரியதர்ஷினி பணியாற்றி வந்துள்ளார். இவர்கள் இருவரும் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் […]
