புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் டி.ஆர்.நகர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவுக்கும் கோவை கணபதி பகுதியில் வசிக்கும் வினோத்குமார் என்பவருக்கும் இடையே திருமண தகவல் மையம் மூலமாக கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பின் வினோத்குமார், சந்தியா ஆகிய இருவரும் கோவையில் தனியாக வாடகைக்கு வீடு […]
