தண்ணீரில் மூழ்கி புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஜாதா(19) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ஆவாரங்குட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக உறவினர் வீட்டிற்கு சுஜாதா சென்றுள்ளார். அங்குள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுஜாதா தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]
