Categories
தேசிய செய்திகள்

முழு அடைப்பு போராட்டம், பள்ளிகளுக்கு விடுமுறை….. பேருந்து கண்ணாடி உடைப்பு…. பரபரப்பு…..!!!!

புதுச்சேரியில் தமிழக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் புதுச்சேரியில் இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் முழு […]

Categories
மாநில செய்திகள்

ஒருவாரம் பள்ளிகள் விடுமுறை.. இன்று மீண்டும் திறப்பு…. ஆன்லைன் வகுப்பு….????

புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்றும் 30 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் இன்னும் குறையவில்லை என்பதால், பள்ளிகளை திறக்காமல், ஆன்லைனில் வகுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல். தமிழகத்திலும் காய்ச்சல் அதிகமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாளை காலாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா….? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவியதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இடையில் நாளை காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா? என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் புதுவையில் நாளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நாளை மற்றும் நாளை மறுநாள் பந்த்….. இதெல்லாம் இயங்காது…. திடீர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்துக்களை அவமரியாதையாக திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்துக்களை அவமரியாதையாக பேசிய திமுக எம்பி ராசாவை கண்டித்து புதுச்சேரியில் 27ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. அதற்கு போட்டியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம், புதுவைக்கு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு துரோகம் செய்துள்ளதாகவும் அதனை கண்டித்து பெரியார் இயக்கங்கள் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மாமியார்-மருமகள் சண்டை” மரணத்தில் முடிந்த விபரீதம்…. உயிருக்கு போராடும் மகன்….. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள திருபுவனை அருகே சன்னியாசிகுப்பம் பகுதியில் ஓட்டுனராக பணிபுரியும் ஆனந்த் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் சேர்ந்த நர்சாக பணிபுரிந்த சந்தியா (24) என்ற பெண்ணை கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் முடிந்த பிறகு ஆனந்த் தன்னுடைய தாயார் அன்னக்கிளி மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அன்னக்கிளி மற்றும் சந்தியாவுக்கு இடையே அடிக்கடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை….. ஆன்லைன் வகுப்பு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் ஒன்றாக இணைந்து பாடம் பயிலும்போது காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்படுகின்றது. இதனால் தொடர்ந்து காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 25ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கக் […]

Categories
தேசிய செய்திகள்

ஐடிஐ மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. உதவி தொகை ரூ.1000 ஆக உயர்வு…. முதல்வர் அசத்தல் அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் உள்ள 9 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் 5 தனியார் தொழில் பயிற்சி நிலையங்களின் பயிற்சியை முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டயம் வழங்கும் விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி 2021, 2022 ஆம் ஆண்டு வரை பயின்ற 884 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், தொழில்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொழில்நுட்ப கல்லூரி செயலர் முத்தம்மா, அரசு அதிகாரிகள், மாணவ, […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 192 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி…. புதுச்சேரி சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இன்று முதல் 25ஆம் தேதி வரை 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே புதுச்சேரி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 192 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில்….. 150 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி….. பெற்றோர்களே உஷார்….!!!!

புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடும் உடல் வலி, சளி ,தொண்டை அலர்ஜி, தலைக்கனம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அதிக அளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகம் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மாநிலம் முழுவதும் இன்று முதல் 25ம் தேதி வரை விடுமுறை….. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

புதுச்சேரி, காரைக்காலில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் வேகமாக பரவி வரும் ப்ளுகாய்ச்சல் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு இன்று முதல் வருகின்ற 25-ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக நம் மாநில அரசு அறிவித்துள்ளது. குழந்தைகளின் சுவாசம் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் காய்ச்சல் பரவுகிறது.அதிலும் […]

Categories
தேசிய செய்திகள்

வைரஸ் காய்ச்சல் பரவல்… புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை தர சுகாதாரத்துறை பரிந்துரை…!!!!!

வைரஸ் காய்ச்சல் பரவுவதால் புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. புதுச்சேரியில் கடந்த பத்து தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் சுகாதாரத்துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களில் 50 சதவிகிதம் சிறுவர்களாக இருப்பதினால் பள்ளிகளை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8ம் வகுப்பு….. பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை…. அரசு திடீர் உத்தரவு…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வருவதால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் ரூ.12 லட்சம்…. இது போதுமா இன்னும் வேணுமா….? ஷாக் ஆன வாட்ச் மேன்….!!!!

புதுச்சேரியில் வாட்ச்மென் ஒருவரது வீட்டிற்கு ஒரு மாத மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (57). டி.வி மெக்கானிக்கான இவர் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800 க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங் […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்…! 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…… 5 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை..!!

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு வங்க கடலில் நேற்று முன் தினம் ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது. அந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது. அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக […]

Categories
தேசிய செய்திகள்

“காணாமல் போன குட்டூ”…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்… வைரலாகும் போஸ்டர்…!!!!!!

புதுச்சேரி காந்திநகர் பகுதியில் பூனை காணவில்லை என ஒட்டப்பட்டு இருக்கின்ற நோட்டீஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கின்றது. இது பற்றிய விசாரணை மேற்கொண்ட போது காந்திநகர் வேளாண் தோட்டத்தை சேர்ந்த ராமன் என்னும் டீ வியாபாரி ஒட்டி இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்த நோட்டீஸில் குட்டூ என அழைக்கப்படும் தனது பூனை கடந்த மூன்றாம் தேதி முதல் காணவில்லை என்றும் இது பற்றி தகவல் தெரிவித்தால் பணம் சன்மானமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு தனது தொலைபேசி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூழாங்கள் படத்திற்கு குவியும் விருது….. குஷியில் விக்கி-நயன்….. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கூழாங்கல் படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வருடம் தோறும் 3 நாட்கள் இந்திய திரைப்பட விழா நடைபெறும். இவ்ழிழா வருகிற செப்டம்பர் 9-ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவில் முதல்வர் ரங்கசாமி சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வழங்கி கௌரவிப்பார். இந்நிலையில் சிறந்த திரைப்படத்திற்காக வருடம்தோறும் சங்கரதாஸ் சுவாமிகள் என்ற விருதுகள் வழங்கப்படும். இந்த விருது கூழாங்கல் திரைப்படத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூழாங்கல் திரைப்படத்தை பி.எஸ் வினோத் ராஜ் இயக்க, நயன்தாரா […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தாயின் அருகே படுத்து கொண்டு…… சாகும் தருவாயில் மாணவன் கூறிய கடைசி வார்த்தைகள்….. நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்…..!!!!

மாணவனின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் பகுதியில் ராஜேந்திரன்-மாலதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 1 மகள் மற்றும் 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுடைய 2-வது மகன் பால மணிகண்டன் நேரு நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு படிப்பின் மீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் எப்போதுமே வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மாணவனுடன் படிக்கும் அருள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மத்திய‌ அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…. கண்டிப்பாக இத ஃபாலோ பண்ணனும்…. மாநில அரசின் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு படை பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான தேர்வு மையங்களில் புதுச்சேரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை 3 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு லாஸ்ட்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செல்ல பெருமாள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சண்டே மார்க்கெட் செயல்படுவதற்கு தடை….. காரணம் என்ன….? அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் தற்போது குறைந்ததால் கடந்த புதன்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்த பிறகு 3 நாட்கள் அல்லது 5 நாட்களுக்கு பிறகு சிலைகளை கடலில் கரைப்பது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வருகிற […]

Categories
தேசிய செய்திகள்

டீசல் விலை: எக்ஸ்ட்ரா டேங்குடன் புதுச்சேரி போகும் லாரிகள்…. வாகன ஓட்டிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை விடவும் புதுச்சேரியில் டீசல் விலையானது லிட்டருக்கு 8 ரூபாய் வரை குறைவாக உள்ளது. இதனால் சரக்கு லாரிகள் கூடுதலாக டேங்க் பொருத்தி டீசல் நிரப்பி கொண்டு வெளிமாநிலங்களுக்கு செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 பைசாவாக இருந்தது. ஆனால் புதுச்சேரியில் 86 ரூபாய் 45 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே லிட்டருக்கு 8 ரூபாய் வரை விலையில் வித்தியாசம் உள்ளதால் […]

Categories
தேசிய செய்திகள்

‘உனக்கு 28… எனக்கு 61’….. முதியவருடன் இளம்பெண்ணுக்கு கெட்டிமேளம்….. செம கடுப்பில் 90’ஸ் கிட்ஸ்….!!!!

புதுச்சேரியை சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் 28 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : புதுச்சேரியில் விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!!

புதுச்சேரியில் 2022ஆம் ஆண்டுக்கான விவசாயிகள் கடன் ரூபாய் 13.8 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.. அதேபோல அதிகாரிகள் பல கேள்விகள் கேட்டு கோப்புகளை தாமதப்படுத்தாமல் இருந்தால் புதுச்சேரி வளர்ச்சி அடையும் என்றும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

முதியோர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…… உயர்த்தப்பட்ட உதவித்தொகை….. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஏழாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை உதவி தொகைகளுக்காக விண்ணப்பித்த முதியோர், விதவை உள்ளிட்டவர்களுக்கு இது வரை அரசு உதவி தொகை வழங்காமல் உள்ளது. அவர்களின் விண்ணப்பம் எந்த நிலையில் கூட உள்ளது என்று தெரியவில்லை. மேலும் பயனாளிகள் சிரமப்படுவதாகவும் கேள்விகள் எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் முதியோர், விதவை உள்ளிட்ட அனைத்து உதவி தொகைகளும் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே! சூப்பர்… பழங்குடியின மற்றும் நரிக்குறவ மக்களுக்கு இலவச வீடுகள்…. முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டி தடுக்கப்படும் என முதல்வர் கூறி உள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூறியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது திமுக எம்எல்ஏ செந்தில்குமார் தனது தொகுதியில் வசிக்கும் இருளர் இன மக்கள் வீடு இல்லாமல் சிரமப்படுவதாகவும், பல மதங்களாக முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே! இது வேற லெவல்…. முதியோர் உதவித் தொகையை உயர்த்திய முதல்வர்…. எவ்வளவு தெரியுமா…..? வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

முதியோர் உதவி தொகையை அதிகரிக்கப் போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் இன்று 7-ம் நாள் சட்டப்பேரவை கூடியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது எதிர் கட்சி தலைவர் சிவா முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைப் பெண்களுக்கான உதவி தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்று கூட தெரியவில்லை. உதவித்தொகை கிடைக்காமல் பலர் சிரமத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உச்சகட்ட கொடூரம்…! “உடம்பெல்லாம் நகக்கீறல்” 2 பிள்ளைகளும் சொன்ன காரணம்….. அதிர்ந்து போன தாய்….!!!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (30). இவருக்கு 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். மது பழக்கம் காரணமாக ஏற்பட்ட தகராறால் சரவணின் மனைவி சில மாதங்களாக கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். இதனிடையே, சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் தந்தை சரவணன் இரவில் தங்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாணவர்களுக்கு பணத்திற்கு பதில் இதுவாம்…. மாநில அரசு புதிய திட்டம்….!!!

இந்தியாவில் கொரோனாவிற்கு பின் நடப்பு ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருக்கின்றது. கடந்த மூன்று வருடங்களாக பள்ளிகள் நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது கொரோனா பரவல் குறைந்து இருப்பதால் மத்திய அரசு ஒரு சில கட்டுப்பாட்டுகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்க்கார  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சீருடை….. அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமான பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் மத்திய அரசு சில கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நாடும் முழுவதும் நடப்பாண்டில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகளில் மாணவ மாணவிகள் இடைவெளி விட்டு உட்கார வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரி முதல்வரை பா.ஜ.க ஆட்டிப்படைக்குது”…. நாராயணசாமி ஓபன் டாக்….!!!!

புதுச்சேரி பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இது குறித்து நாராயணசாமி பேசியதாவது “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவையில் ரூபாய்.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால் இவற்றில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டுவர எவ்விதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. சென்ற காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் கூறப்படுகின்றன. கடந்த வருடம் முதல்வர் கூறிய அம்சங்களும் இதில் வந்துள்ளது. ஸ்மார்ட்சிட்டி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும்…. முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு முதல்….. +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்… முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அவர் கூறியதாவது, புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தடையில்லா மின் விநியோகம்…. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 802 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அவர் கூறியதாவது, புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 802 கோடி ஒதுக்கீடு செய்து அரசு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்கள் கனமழை பெய்யும்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 22 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப் பகுதி, வட ஆந்திர கடலோரப் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! இவர்களுக்கு இலவச மனைப்பட்டா….. மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற தியாகிகள் கவுரவிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், புதுச்சேரியில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனை உடனடியாக உயர்த்த முடியாது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்க உள்ளது. அதில் விரிவாக பேசி ஓய்வூதியம் உயர்த்துவது சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசி மனைப்பட்டா […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

நாளை அரசு பொது விடுமுறை….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை ஆகஸ்ட் 9 அன்று கொண்டாடப்பட உள்ளது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த தினம் முஹர்ரம்-உல்-ஹரம் என்றும் அழைக்கப்படுகிறது. மொகரம் பண்டிகையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் செயல்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிக்கு ஆபாசப்படம்…. ஆசிரியரின் வெறிச் செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

புதுச்சேரியில் தனியார் பள்ளி விலங்கியல் ஆசிரியர் டோனி வளவன்,  பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இவர் 12 ஆம் வகுப்பு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தனது மொபைலுக்கு ஆபாச படம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி தன் பெற்றோரிடம் முறையிட […]

Categories
தேசிய செய்திகள்

குரூப் சி தேர்வு…. அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரியில் 32 ஆயிரம் அரசு பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் 22,000 ஊழியர்கள் மட்டுமே தற்போது பணியில் இருக்கின்றன. பத்தாயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே காலியாக உள்ள பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காலி பணியிடங்கள் எவ்வளவு என்பது குறித்த பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசின் குரூப் சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மட்டும் வயது வரம்பை இரண்டு ஆண்டுகள் தளர்வு செய்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு….. வெளியான தரவரிசை பட்டியல்…..!!!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகள் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த நீட் தேர்வு மே மாதம் 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கு 1,527 பேரும் மற்றும் முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கு 225 பேரும் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு கடந்த 21ம் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை…. சிறுவன் உட்பட 4 பேர் கைது…. புதுச்சேரியில் பரபரப்பு….!!!

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் ஆபரேஷன் விடியல் என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விவிபி நகர் அருகே மாணவர்களிடம் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளர் முத்துக்குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தியதில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 பேரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அவர்கள் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“புதிய கல்விக் கொள்கை” கூடிய விரைவில் அறிமுகம்…. ஆளுநர் அறிவிப்பு….!!!

புதிய கல்வி கொள்கை திட்டம்  கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என ஆளுநர் கூறியுள்ளார். புதுச்சேரியில் கூடிய விரைவில் புதிய கல்விக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் புதிய கல்வி கொள்கை திட்டத்தை பொருத்தவரை எந்த ஒரு மொழியையும் திணிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. நம்முடைய தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாகவே புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தலை காதல் விவகாரம்…. பெண்ணை வெட்டி கொலை செய்த தாய் மாமன்…. பின்னணி என்ன….?

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே உள்ள சன்னியாசி குப்பத்தை சேர்ந்த நாகராஜன்- மயில் தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் மயில் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் நாகராஜ் அம்பிகா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நாகராஜிற்கு நான்கு மகள்கள் அபினேஷ் என்ற மகன் இருக்கின்றார். இதில் மூத்த மகள் அங்காளம்மாளுக்கு திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார். மேலும் கீர்த்தனா(18) என்ற மகள் கலிதீர்த்தால் குப்பத்தில் உள்ள அரசு […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று(ஜூலை 13) விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு….!!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு  இன்று (13-07-2022) அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மன்சூர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் வரும் சனிக்கிழமை (16-07-2022) அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள்…. 10 நாட்களுக்குள் தொடங்கப்படும்…. கவர்னர் புதிய அறிவிப்பு….!!!

மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் கூடிய விரைவில் இயக்கப்படும் என கவர்னர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு செல்ல இருக்கிறேன். இன்று 5 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களோடு சேர்ந்து மதிய உணவு அருந்துவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார். இதனையடுத்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் செல்ல இருப்பதால் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொண்டு சரி செய்ய முடியும். அதன் பிறகு சுகாதாரத் […]

Categories
புதுச்சேரி

மூன்று நாட்கள் பள்ளி….. கல்லூரிகளுக்கு விடுமுறை….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலருக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. காரைக்காலில் காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலராவுக்கு இன்று இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் காரணமாக 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகள், மண்டபங்கள், உணவகங்கள், கல்விக் கூடங்களில் ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: “காலரா எதிரொலி”…. மறு உத்தரவு வரும் வரை 144 தடை அமல்…. சற்று முன் அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நோயாளிகளுக்கு காலரா இருப்பது உறுதியாகியது. இதை எடுத்து பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக […]

Categories
தேசிய செய்திகள்

144 தடை உத்தரவு….. “மாநிலம் முழுதும் அவசர நிலை பிரகடனம்”…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிகரித்து வரும் காலரா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த இருவர் இணைநோய்களால் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் காலரா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் எச்சிரிக்கையாக இருக்குமாறும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். அதிகரித்து வரும் காலரா தொற்றை கட்டுப்படுத்த அம்மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் பொதுசுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போராட்டம்… எதற்கு தெரியுமா?…. போக்குவரத்து கழகம் எச்சரிக்கை….!!!

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 500 நிரந்தர ஊழியர்களும் 270 ஒப்பந்த ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனையடுத்து நேர தகராறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்கியுள்ளனர். இதனை கண்டித்து புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கடந்த 24ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இன்று மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“தமிழ்த்தாய் வாழ்த்து” விழாவை விட்டு வெளியேறிய முதல்வர்…. அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு….!!!

இந்தியாவில் சமீப காலமாகவே பல்வேறு பகுதிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு மற்றும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்துவது போன்ற பல்வேறு விதமான சம்பவங்கள் அரசு விழாக்களில் நடந்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் அப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகள் சர்வதேச பொது சுகாதார பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ் மாணவர்களே….! இனி பள்ளிகள் அரை நாள் மட்டுமே…. மாநில அரசு அதிரடி….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. எனவே ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா குறைந்ததால் பள்ளி திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் தொடங்கி தேர்வுகளும் முடிவடைந்தது. இதனையடுத்து கோடை விடுமுறைக்கு பிறகு நாளை முதல் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மற்றும் நாளைய மறுதினம் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி மக்களே உஷார்…. மீண்டும் பரவத் தொடங்கும் கொரோனா…. ஒரே நாளில் இவ்வளவு பாதிப்பா?….!!!

நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுதும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி வரை 77 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் நேற்று […]

Categories

Tech |