புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலையொட்டி நாளை முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறி, மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கை மூலம் வெளியிட்டு வருகிறார்கள். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான […]
