புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. 30 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. அதில் என் ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தன. […]
