ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் இருக்கிறது. இதனால் அவர் மனநல மருத்துவரை பார்க்கவேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வரான நாராயணசாமி அவர்கள் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் நடை பயணத்தை விமர்சித்துப் பேசிய தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு நாராயணசாமி பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிசை தெலுங்கானாவுக்கு தான் கவர்னர் ஆவார். ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவரை உதாசீனப்படுத்துவதால், அவர் புதுவையில் அதிகமான […]
