திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள், 1 1/2 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவினை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தி.மு.க. கூட்டணி மற்றும் சுயேச்சைகள், இதர கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவில் வாக்குகள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கிறது. அவை அடிப்படை பலத்தை அந்தக் கட்சிகளுக்கு கொடுக்கிறது. கூடுதல் வாக்குகளை பெற்றால்தான் ஏதேனும் ஒரு கட்சி வெற்றியை […]
